உலக செய்திகள்

உலகில் வேகமுடன் வளர்ந்து வரும் நாடுகளில் 5வது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது: மந்திரி பேச்சு + "||" + Pakistan figures 5th among world's fast growing countries: Minister

உலகில் வேகமுடன் வளர்ந்து வரும் நாடுகளில் 5வது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது: மந்திரி பேச்சு

உலகில் வேகமுடன் வளர்ந்து வரும் நாடுகளில் 5வது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது:  மந்திரி பேச்சு
உலகில் வேகமுடன் வளர்ந்து வரும் நாடுகளில் 5வது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்து உள்ளது என அந்நாட்டின் திட்ட துறை மந்திரி பேசியுள்ளார். #PlanningMinister

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் திட்ட துறை மந்திரியாக இருப்பவர் அஹ்சான் இக்பால்.  இவர் நரோவல் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திறமைமிக்க மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

அதன்பின்னர் அவர் மாணவர்களிடையே பேசும்பொழுது, சீனா மற்றும் பாகிஸ்தான் பொருளாதார திட்டத்தின் கீழ் நாட்டின் ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

தொடர்ந்து அவர், நாட்டிற்கு சிறந்த முறையில் சேவை செய்யும் வகையில் தங்களது குழந்தைகளின் நடத்தையினை கட்டமைப்பதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.