தேசிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரசில் இருந்து முன்னாள் கால்பந்து கேப்டன் பாய்சுங் பூட்டியா வெளியேறினார் + "||" + Former India captain Bhaichung Bhutia quits Trinamool Congress

திரிணாமுல் காங்கிரசில் இருந்து முன்னாள் கால்பந்து கேப்டன் பாய்சுங் பூட்டியா வெளியேறினார்

திரிணாமுல் காங்கிரசில் இருந்து முன்னாள் கால்பந்து கேப்டன் பாய்சுங் பூட்டியா வெளியேறினார்
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று விலகியுள்ளார். #MamataBanerjee #BhaichungBhutia

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  இந்த வருடம் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரசில் இணைந்திருந்த இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான 41 வயது நிறைந்த பாய்சுங் பூட்டியா அக்கட்சியில் இருந்து விலகும் முடிவினை தனது சமூக வலைதளத்தின் வழியே அறிவித்துள்ளார்.

அதில், அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ மற்றும் அரசியல் பதவிகளில் இருந்து இன்றில் இருந்து விலகுகிறேன்.  நான் இந்தியாவிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்றும் எந்த கட்சியிலும் இணைந்திருக்கவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் இந்திய கால்பந்து அணியில் திறமையாக விளையாடி வந்த பூட்டியா, திரிணாமுல் வேட்பாளராக வெற்றி பெற இயலவில்லை.  மேற்கு வங்காளத்தில் அக்கட்சி பெருமளவிலான தொகுதிகளை கைப்பற்றிய நிலையிலும், சிலிகுரி சட்டசபை தொகுதிக்கான தேர்தல் மற்றும் டார்ஜிலிங் நாடாளுமன்ற தொகுதியிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது.