மாநில செய்திகள்

சென்னை ஐஐடி அரசு விழாவில் சமஸ்கிருத பாடல் - வைகோ கண்டனம் + "||" + Chennai IIT Government Festival Sanskrit song Vaiko condemned

சென்னை ஐஐடி அரசு விழாவில் சமஸ்கிருத பாடல் - வைகோ கண்டனம்

சென்னை ஐஐடி அரசு விழாவில்  சமஸ்கிருத பாடல் - வைகோ கண்டனம்
சென்னை ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார். #IITMadras #Vaiko
சென்னை

கோவையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹிந்தி, ஹிந்து, ஹிந்துராஷ்டிரா என்பதை அமல்படுத்தவே மோடி முயல்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடவிடாமல் அவமதித்த ஐஐடி நிர்வாக அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும். ஆங்கிலம் தெரிந்த மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியில் பேசியது ஏன்? 

சென்னை ஐஐடி அரசு விழாவில்  சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதற்கு மத்திய மந்திரிகள் நிதின் கட்காரியும், பொன். ராதாகிருஷ்ணனும்  மன்னிப்பு கேட்கவேண்டும்.

சில நாட்களாக வானொலியில் இந்தியில் முழுக்க முழுக்க விளம்பரங்களும் செய்திகளும் ஒலிபரப்பாகின்றன. வேதமொழியாக கூறிக்கொள்ளும் சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ்  என கூறினார்.