மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் உருவச்சிலையில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை - தம்பித்துரை எம்.பி. + "||" + Jayalalithaa Statue There is no negligence or carelessness- Thambidurai MP

ஜெயலலிதாவின் உருவச்சிலையில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை - தம்பித்துரை எம்.பி.

ஜெயலலிதாவின் உருவச்சிலையில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை - தம்பித்துரை எம்.பி.
ஜெயலலிதாவின் உருவச்சிலை வடிவமைப்பில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை என தம்பித்துரை எம்.பி. கூறினார். #JayalalithaaStatue #Thambidurai
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்தான மனுவும் கொடுத்து இருக்கிறார். இதனை பிரதமர் மோடி பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்.

ஜெயலலிதாவின் உருவ சிலையில் சிறு குறைபாடுகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். இதில் எந்தவொரு அலட்சியமோ, கவனக்குறைவோ இல்லை.

பிரதமர் மோடி சொல்லி தான் துணை-முதலமைச்சர் ஆனேன் என்று ஒ.பி.எஸ். கூறியது குறித்து அவரிடமே கேளுங்கள். அ.தி.மு.க. என்பது ஒரு ஆலமர இயக்கம். அதை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.விடம் தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.