மாநில செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம் : இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கமல்ஹாசன் மும்பை பயணம் + "||" + Actor Sridevi to attend the funeral Kamal Hassan travels to Mumbai

நடிகை ஸ்ரீதேவி மரணம் : இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கமல்ஹாசன் மும்பை பயணம்

நடிகை ஸ்ரீதேவி மரணம் : இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கமல்ஹாசன் மும்பை பயணம்
ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கமல்ஹாசன் இன்று மும்பைக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #RIPSridevi #Sridevi
சென்னை

உறவினர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூருடன் துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பின் காரணமாகக் காலமானார்.

ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து மும்பைக்கு இன்று கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ரஜினி நேற்றே மும்பை சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நடிகர் கமலும் மும்பையில் நடக்கும் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்காக அவர் இன்று மும்பைக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .

இது போல் மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் சென்றுள்ளார்.  ரஜினி, கமல் இவர்களைத் தவிர தமிழ் திரையுலகைச் சேர்ந்த மேலும் பல பிரபலங்கள் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.