உலக செய்திகள்

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும் அணு ஆயுத பரவலை தடுப்பதே நோக்கமாக இருக்கும் -அமெரிக்கா + "||" + US Talks with North Korea should include denuclearisation

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும் அணு ஆயுத பரவலை தடுப்பதே நோக்கமாக இருக்கும் -அமெரிக்கா

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும்  அணு ஆயுத பரவலை தடுப்பதே நோக்கமாக இருக்கும் -அமெரிக்கா
வடகொரியாவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தை நடந்தாலும் அணு ஆயுத பரவலை தடுப்பதே நோக்கமாக இருக்கும் என அமெரிக்கா கூறி உள்ளது. #denuclearisation
வாஷிங்டன்

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா , அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து இத்தகைய சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.  டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் வடகொரியா செயல்பாட்டிற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. எச்சரிக்கையையும் மீறி வடகொரியா செயல்பட்டதால் அந்நாட்டு மீதான பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த மீண்டும் அமெரிக்கா துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து வட கொரியாவின் ஏற்றுமதி நிறுவனங்கள் மீது அமெரிக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான தடைகளை விதித்து உள்ளது.

இந்த நிலையில் தென் கொரியாவில் நடந்து முடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளன்று  வட கொரியா அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக தென் கொரியா கூறியுள்ளது.

வட கொரியாவுடனான எந்த விதமான பேச்சுவார்த்தை நடந்தாலும், அந்நாட்டின் அணுஆயுத பரவலை தடுப்பதே அதன் குறிக்கோளாக இருக்குமென்று வெள்ளைமாளிகை  தெரிவித்துள்ளது.மேலும் வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்பதில்  அமெரிக்காவும் உலகமும் தெளிவாக இருக்கிறது என கூறி உள்ளது.