சினிமா செய்திகள்

தடயவியல் அறிக்கை நடிகை ஸ்ரீதேவி குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்பட்டது + "||" + Actress Sridevi dies; Police release forensic report to family

தடயவியல் அறிக்கை நடிகை ஸ்ரீதேவி குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்பட்டது

தடயவியல் அறிக்கை நடிகை ஸ்ரீதேவி குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்பட்டது
நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான தடயவியல் அறிக்கை அவரது குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது. #RIPSridevi #Sridevi
சென்னை

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் கோலோச்சி, இந்தி சினிமாவின் ராணியாக வலம் வந்த  ஸ்ரீ தேவி, இப்போதும் இந்திய ரசிகர்கள் மனதில் நிறைந்து உள்ளார்.

இந்திய மக்கள் சனிக்கிழமை இரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, துபாயிலிருந்து வந்த ஒரு துயர செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது .

ஆம், ஸ்ரீதேவி 54 வயதில் இந்த பூவுலகைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்பதே அது. 

அவர் துபாயில் ஒரு திருமண நிகழ்வில் இருந்தபோது, அவர் மாரடைப்பால்  இறந்தார் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது உடல் நிலையில் எப்போதும் மிகவும் கவனமாக இருக்கும் ஒரு பிரபலம் இதுபோல சட்டென்று இறந்துபோவது நம்பமுடியாத ஒரு விஷயம்.

இன்றும் அவரது உடல் துபாயில் இருந்து இந்தியா கொண்டுவரப்படவில்லை.  அம்பானிக்கு சொந்தமான தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனி விமானம் நேற்று பிற்பகல் துபாய் சென்றுள்ளது. ரிலையன்ஸ் டிரான்ஸ்மிஷன் அண்ட் டிராவல் லிமிடெட் நிறுவனமான எம்பிரேர்-135 பி.ஜே., 13- இருக்கை தனியார் ஜெட், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் துபாய் சென்றது. துபாயில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்குள் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. 

ஸ்ரீதேவியின் தடயவியல் அறிக்கை அவரது குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தூதரக அதிகாரியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
தடயவியல் அறிக்கை இன்னும் பிரிக்கபடவில்லை. அந்த அறிக்கை காவல் துறையினரிடம் கொடுக்கப்படும். காவல் துறையினர் தடயவியல் அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே உடல் ஒப்படைக்கப்படும்.

தடயவியல் துறை ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைத்ததும் முஹைஸ்னா கொண்டு செல்லப்பட்டு எம்பாமிங் செய்யப்படுகிறது. எம்பாமிங் செய்ய 90 நிமிடங்கள் ஆகும்.

துபாய் போலீசார் இறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும். அதன் பிறகு இந்திய தூதரகம் ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். பின்னர் இமிகிரேஷன் துறையில் முடிக்க வேண்டிய ஃபார்மாலிட்டிகளை முடிக்க வேண்டும்.

ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என்று பப்ளிக் ப்ராசிகியூட்டர் அனுமதி அளிக்க வேண்டும். அதன் பிறகே அவரின் உடல் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படும்.

ஸ்ரீதேவியின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு  ஜூஹூ பகுதியில் நடைபெறுகிறது.  இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  முன்னதாக  வர்ஷா என்ற பகுதியில்  உள்ள பாக்கியா பங்களாவில் ஸ்ரீதேவியின் உடல்  அஞ்சலிக்காக  வைக்கப்படுகிறது. அதற்கான  முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.