கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம் + "||" + R Ashwin to lead Kings XI Punjab in #IPL2018

ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்

ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #IPL2018
சென்னை, 

ஐபில் 2018-ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில்  எடுத்து இருந்தது. கடும் போட்டிக்கு இடையே ரூ. 7.6 கோடி கொடுத்து அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில், பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராகவும் விளங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் செயல்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.  ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல்லை இந்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

இதையடுத்து, அஸ்வின் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  இரண்டு ஆண்டுகள் இடை நீக்கம் செய்யப்படும் முன்பு வரை சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின், அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.