சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது + "||" + Bollywood actress Sridevis body, died of accidental drowning

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது

நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது
நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்த புதிய தகவல் தடயவியல் அறிக்கையில் வெளியாகி உள்ளது. #RIPSridevi #Sridevi
நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பால் தான் இறந்துள்ளார், சந்தேகங்களுக்கு இடம் இல்லை என்று தடயவியல் மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்று இருந்தார். திருமணத்தில் அவரது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன்  கலந்து கொண்டார்.  அவரது மூத்த மகள் ஜான்வி கபூர், தனது முதல் படத்திற்கு பிஸியாக இருந்ததால் அங்கு செல்லவில்லை.  திருமணம் முடிந்ததும். போனி கபூரும்  இளைய மகள் குஷியும் நாடு திரும்பினர். ஆனால் ஸ்ரீதேவி அங்கேயே தங்கி இருக்க முடிவு செய்தார். 
ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று கூறி ஸ்ரீ தேவி தங்கிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், போனி கபூர் தனது மனைவி ஸ்ரீ தேவிக்கு ''ஆச்சரிய விருந்து'' அளிப்பதற்காக மீண்டும் சனிக்கிழமை துபாய் சென்றார்.

இருவரும் தங்களது அறையில் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். பின்னர் ஸ்ரீ தேவி குளியலறைக்குள் சென்றுள்ளார். 15  நிமிடங்கள் ஆகியும் வெளியே வராததால், கதவை அவரது கணவர் போனி கபூர் தட்டியுள்ளார். அப்போதும், கதவு திறக்காததால், அவரது நண்பரை அழைத்து கதவை உடைத்து திறந்துள்ளனர். அப்போது ஸ்ரீ தேவி பாத் டப்பில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்த  தடயவியல் அறிக்கை அவரது குடும்ப உறுப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய தூதரக அதிகாரியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
தடயவியல் அறிக்கை இன்னும் பிரிக்கபடவில்லை. அந்த அறிக்கை காவல் துறையினரிடம் கொடுக்கப்படும். காவல் துறையினர் தடயவியல் அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே உடல் ஒப்படைக்கப்படும்.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்த  தடயவியல் அறிக்கையில்  ஸ்ரீதேவி மரணத்தில் குற்றவியல் நோக்கமில்லை. ஓட்டல் குளியல் தொட்டியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதில் மூழ்கி இறந்தாகவும் ,தற்செயலாக நடந்த விபத்து கூறபட்டு உள்ளது. 

ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீதேவி ஆல்கஹாலின் பிடியில் இருந்ததால் அவர் சமநிலை இழந்து குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.என கல்ஃப் நியூஸ்  தகவல் தெரிவிக்கபட்டு உள்ளது