உலக செய்திகள்

சிரியாவில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர் + "||" + UN chief calls for Syria ceasefire to be 'immediately implemented'

சிரியாவில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர்

சிரியாவில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ஐநா பொதுச்செயலாளர்
சிரியாவில் போர் நிறுத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். #syriya
ஜெனீவா,


சிரியாவில் 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது. தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படைகள் ஒரு வார காலம் நடத்திய கடும் தாக்குதலில் 500–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இது உலக அரங்கை அதிர வைப்பதாக அமைந்தது. கொல்லப்பட்டவர்களில் 127 பேர் எந்தப் பாவமும் அறியாத அப்பாவிக் குழந்தைகள் என்பது கொடூரத்தின் உச்சம் ஆகும். நேற்று முன்தினம் நடந்த ஒரு நாள் தாக்குதலில் அப்பாவி மக்கள் 41 பேர் பலியாகினர். இப்படி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு உலகத்தலைவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். 

சிரியாவில் ஒரு பக்கம்  உணவுப்பொருட்களோ, நிவாரணப்பொருட்களே இன்றி அப்பாவி மக்கள் தவிக்கின்றனர். இன்னொரு புறம் போரினால் படுகாயம் அடைந்து ஏராளமான மக்கள் சிகிச்சை பெற வழியின்றி தத்தளிக்கின்றனர். கிழக்கு கூட்டா பூமியின் நரகம் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வர்ணிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.

இந்த நிலையில்தான் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷிய நாட்டின் ஆதரவுடன் 30 நாள் போர் நிறுத்தத்துக்கு நேற்று முன்தினம் ஒரு மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம், அங்கு உணவுப்பொருட்களும், நிவாரணப்பொருட்களும் சென்று அடைவதற்கு வழி வகுக்கும். அது மட்டுமின்றி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் வெளியேற உதவியாக அமையும். இந்த போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.