மாநில செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது? சுப்பிரமணியசாமி கேள்வி + "||" + There is no wrong singing samskritam in chennai IIT says subramanian swamy

சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது? சுப்பிரமணியசாமி கேள்வி

சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது? சுப்பிரமணியசாமி கேள்வி
சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது? என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். #SubramanianSwamy #IIT
ஆலந்தூர், 

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடியதில் என்ன தவறு இருக்கிறது? ஐ.ஐ.டி. என்பது அகில இந்திய கல்வி நிறுவனம். அது தமிழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரி கிடையாது. நாடாளுமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐ.ஐ.டி.யில் மகாகணபதி பாடலை பாடினால் ஒன்றும் தவறு கிடையாது” என்றார்.