தேசிய செய்திகள்

ஒகி புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ 133 கோடி ஒதுக்கியது மத்திய அரசு + "||" + central government allocated Rs 133 crore to the tamil nadu as a storm relief fund

ஒகி புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ 133 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

ஒகி புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ 133 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
ஒகி புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ 133 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. #Ockhi
புதுடெல்லி,

கடந்த ஆண்டு இறுதியில் வங்கக்கடல் பகுதியில் உருவான ஒகி புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஏகப்பட்ட மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. விபத்து சம்பவங்களில் பொதுமக்கள் உயிரிழந்தனர். இதேபோன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.  தமிழகம் மற்றும் கேரளாவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உயிரிழந்த சம்பவமும் நேரிட்டது. ஓகி புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது.

இந்த நிலையில், ஒகி புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ 133 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓகி புயல் நிவாரணமாக கேரளாவிற்கு  169.06 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.