தேசிய செய்திகள்

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி உடல் இன்றிரவு மும்பை வருவதில் சிக்கல் + "||" + Delay likely in return of Sridevi's body

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி உடல் இன்றிரவு மும்பை வருவதில் சிக்கல்

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி உடல் இன்றிரவு மும்பை வருவதில் சிக்கல்
துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி உடல் இன்றிரவு மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #RIPSridevi #Sridevi
மும்பை,

துபாயில் நடந்த தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 24–ந்தேதி இரவு திடீரென மரணம் அடைந்தார்.ஸ்ரீதேவியின் மரணச் செய்தியை அறிந்ததும் நேற்று காலை முதலே மும்பை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள அவரது வீட்டு முன் ரசிகர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். 

ஆனால் துபாயில் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தாமதம் காரணமாக இன்றிரவு ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வருவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.  துபாய் அரசு வழக்கறிஞர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், ஸ்ரீதேவியின் உடல் இன்றிரவு மும்பை வருவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.