தேசிய செய்திகள்

மும்பையில் உள்ள அனில் கபூரின் வீட்டுக்கு சென்ற கமல், ஸ்ரீதேவியின் மூத்த மகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் + "||" + Kamal Haasan reaches Anil Kapoor's residence in Mumbai.

மும்பையில் உள்ள அனில் கபூரின் வீட்டுக்கு சென்ற கமல், ஸ்ரீதேவியின் மூத்த மகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல்

மும்பையில் உள்ள அனில் கபூரின் வீட்டுக்கு சென்ற கமல், ஸ்ரீதேவியின் மூத்த மகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல்
மும்பையில் உள்ள அனில் கபூரின் வீட்டுக்கு சென்ற கமல், ஸ்ரீதேவியின் மூத்த மகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். #KamalHaasan #RIPsridevi
மும்பை,

துபாயில் நடந்த தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 24–ந்தேதி இரவு திடீரென மரணம் அடைந்தார்.

ஸ்ரீதேவியின் மரணச் செய்தியை அறிந்ததும் நேற்று காலை முதலே மும்பை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள அவரது வீட்டு முன் ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர். ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரவு வரையிலும் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

ஆனால் துபாயில் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தாமதம் காரணமாக இரவு வரையிலும் ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்படவில்லை. 
ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவே சென்னையில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்துவிட்டார்.அவர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.

 நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை விமானத்தில் மும்பை வந்தார். தொடர்ந்து, மும்பையில் உள்ள அனில் கபூரின் வீட்டுக்கு சென்ற கமல், ஸ்ரீதேவியின் மூத்த மகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.