சினிமா செய்திகள்

ஸ்ரீதேவியின் உடல் நாளை எம்பார்மிங் செய்யப்படும் என தகவல் + "||" + Dubai police await 'clearance', return of Sridevi's body may be delayed

ஸ்ரீதேவியின் உடல் நாளை எம்பார்மிங் செய்யப்படும் என தகவல்

ஸ்ரீதேவியின் உடல் நாளை எம்பார்மிங் செய்யப்படும் என தகவல்
துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நாளை எம்பார்மிங் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. #Sridevi #RIPsridevi
துபாய்,

துபாயில் நடந்த தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 24–ந்தேதி இரவு திடீரென மரணம் அடைந்தார். ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலை இந்தியா கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துபாயில் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் தாமதம் காரணமாக இன்றிரவு ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதற்கிடையே, துபாய்  அரசு வழக்கறிஞர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் நாளை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறும் போது, “ மற்றொரு ஒப்புதல் கிடைத்த பிறகே உடல் ஒப்படைக்கப்படும் என்று எங்களுக்கு  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது” என்றார். ஆனால், எந்த மாதிரியான ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது பற்றி இந்திய தூதர் தெளிவாக கூறவில்லை. இது அவர்களின் உள்நாட்டு விவகாரம், எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது” என்றார்.