மாநில செய்திகள்

பெரியார் சிலைகள் குறித்து சர்ச்சை கருத்து: பாலக்கோடு கோர்ட்டில் எச்.ராஜா மீது வழக்கு + "||" + Controversy about Periyar statues

பெரியார் சிலைகள் குறித்து சர்ச்சை கருத்து: பாலக்கோடு கோர்ட்டில் எச்.ராஜா மீது வழக்கு

பெரியார் சிலைகள் குறித்து சர்ச்சை கருத்து: பாலக்கோடு கோர்ட்டில் எச்.ராஜா மீது வழக்கு
எச்.ராஜாவை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. #Periyarstatues
தர்மபுரி

தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என்ற கருத்தை வெளியிட்ட பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காரிமங்கலம் அருகே உள்ள நரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு குற்றவியல் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் பெரியார் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ள எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.