மாநில செய்திகள்

டெல்லியில் தமிழக அரசின் குழு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவு + "||" + Recorded on MK Stall's Face Book

டெல்லியில் தமிழக அரசின் குழு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவு

டெல்லியில் தமிழக அரசின் குழு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவு
டெல்லியில் தமிழக அரசின் குழு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளார். #MKStalin
சென்னை, 

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் (பேஸ்புக்) பதிவில் கூறியிருப்பதாவது:–

டெல்லியில், 9–3–2018 அன்று (இன்று) நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக அரசின் குழு, கடந்த 22–2–2018 அன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைப்பதை வலியுறுத்தும் வகையிலான அணுகுமுறையை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

வேறு எவ்வித இடைக்கால ஏற்பாடு எதிலும், அனைத்து கட்சிகள் – விவசாய சங்கங்களின் ஒப்புதலின்றி, சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.