மாநில செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூட்டம்: தமிழக அரசின் தலைமை செயலாளர் டெல்லி சென்றார் + "||" + Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூட்டம்: தமிழக அரசின் தலைமை செயலாளர் டெல்லி சென்றார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூட்டம்: தமிழக அரசின் தலைமை செயலாளர் டெல்லி சென்றார்
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. #CauveryManagement Board
சென்னை

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விவாதிக்க 4 மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்பட அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, பொதுத்துறை மற்றும் முதல்–அமைச்சரின் செயலாளர் செந்தில்குமார், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.