மாநில செய்திகள்

அம்பேத்கர் சிலை மீது பெயிண்டு வீச்சு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Ambedkar sculptures on the statue

அம்பேத்கர் சிலை மீது பெயிண்டு வீச்சு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் சிலை மீது பெயிண்டு வீச்சு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூரில் அம்பேத்கர் சிலை மீது பெயிண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்த பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Ambedkarstatue
திருவொற்றியூர்,

திருவொற்றியூரில் அம்பேத்கர் சிலை மீது பெயிண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்த பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் பெரியார் நகரில் அம்பேத்கரின் மார்பளவு சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றி இரும்பு கூண்டும் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம கும்பல், அம்பேத்கர் சிலையின் மீது சிவப்பு நிற பெயிண்டை ஊற்றிச்சென்று விட்டனர்.

நேற்று காலை அம்பேத்கர் சிலையில் பெயிண்டு ஊற்றப்பட்டு இருப்பதைக் கண்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் ஏராளமானவர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சேஷன்சாய் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்னும் 2 நாட்களில் குற்றவாளிகளை பிடித்து விடுவதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.