மாநில செய்திகள்

‘எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி + "||" + Interview with Panneerselvam

‘எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

‘எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
உதவியாளர் செய்ததாக கூறுவது அபத்தம். எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை,

உதவியாளர் செய்ததாக கூறுவது அபத்தம். எச்.ராஜா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை அ.தி.மு.க. அலுவலகத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டார். அவரும் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மை தான் என்று உறுதியுடன் கூறியிருக்கிறாரே?

பதில்:- எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சைதை துரைசாமி கலந்து கொண்டது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவர் எந்த கருத்து சொன்னாலும், அது அ.தி.மு.க. வின் கருத்தாக இருக்காது.

கேள்வி:- எம்.ஜி.ஆர். சினிமா துறையில் இருந்து வந்தவர் என்றாலும் அவருடைய நூற்றாண்டு விழாவில் திரைப்படத்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ரஜினிகாந்த் குற்றச்சாட்டு வைத்துள்ளாரே?

பதில்:- நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய தலைவராக பரிணாம வளர்ச்சியை பெற்றுத்தான் அவர் முழுநேர அரசியல்வாதியாகி 3 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்து நல்லாட்சியை தந்தார். தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றார் என்பது நிதர்சனமான உண்மை.

பதில்:- பெரியார் பற்றி எச்.ராஜா சொன்ன கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது. அவருடைய உதவியாளர் தான் தன்னுடைய டுவிட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார் என்று சொல்வது அபத்தமானது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே எச்.ராஜா பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.

கேள்வி:- பெரியார் தமிழை அவமதித்தார் என்று எச்.ராஜா மீண்டும் கருத்து தெரிவித்துள்ளாரே?

பதில்:- பெரியார் துணிச்சலான கருத்துக்களை சொல்லக் கூடியவர். அவர் எந்த கருத்து சொன்னாலும் அது தமிழ் சமுதாயம் வளர்வதற்காக மட்டுமே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.