மாநில செய்திகள்

மகளிர் தினத்தையொட்டி கராத்தே வீராங்கனைகள் 12 பேருக்கு விருது நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார் + "||" + 12 people are awarded Actor Rajinikanth presented

மகளிர் தினத்தையொட்டி கராத்தே வீராங்கனைகள் 12 பேருக்கு விருது நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்

மகளிர் தினத்தையொட்டி கராத்தே வீராங்கனைகள் 12 பேருக்கு விருது நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்
மகளிர் தினத்தையொட்டி கராத்தே வீராங்கனைகள் 12 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் விருது வழங்கினார். #Rajinikanth
சென்னை, 

மகளிர் தினத்தையொட்டி கராத்தே வீராங்கனைகள் 12 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் விருது வழங்கினார்.

இந்திய கராத்தே சங்கம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

இந்திய கராத்தே சங்கம் மட்டும் தான் கராத்தே விளையாட்டுக்கான தேசிய சம்மேளனமாக மத்திய அரசாலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தாலும் அங்கீகரிக்கப்பட்டது ஆகும்.

இந்த சங்கம் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் உலக கராத்தே சம்மேளனத்தாலும், இணைப்பு சங்கமாக செயல்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக கராத்தே தியாகராஜனும், பொதுச்செயலாளராக பரத் சர்மாவும் உள்ளனர். இந்திய கராத்தே சங்கம் நேற்று சென்னையில் மகளிர் தினத்தை கொண்டாடியது.

தேசிய மற்றும் சர்வேதச அளவில் மிகச்சிறந்த முறையில் போட்டியிட்டு சிறப்பு பெற்ற கராத்தே வீராங்கனைகளை நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பாராட்டினார். இந்த பாராட்டு நிகழ்வின்போது, 1980-ம் ஆண்டு சென்னையில் உலக கிராண்ட் மாஸ்டரான ஹன்சி யாமக்குச்சியின் கராத்தே நிகழ்ச்சி, ரென்சி ஆர்.வி.டி. மணி ஏற்பாட்டில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரான மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் நடந்ததையும், அதில் சிறப்பு விருந்தினராக மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டதையும் நினைவு கூர்ந்து, அந்த நிகழ்ச்சியில் தானும் கலந்துகொண்டதை குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசினார்.

ஒலிம்பிக் விளையாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்ற அடிப்படையில் மட்டும் அல்லாமல், கராத்தே மிகச்சிறந்த போர் கலை ஆகும். அதிலும் சிறப்பாக பெண்களுக்கு சுய பாதுகாப்பாகவும், தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் மிகவும் பயன் உள்ளது ஆகும்.

இது மட்டும் அல்ல, கட்டுப்பாடு, உடல் தகுதி, வலிமை, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற பல நலன்களுக்கு கராத்தே உகந்தது ஆகும். தற்போது இந்தியாவில் லட்சக்கணக்கான பெண்கள் கராத்தே பயிற்சியை பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் இந்திய கராத்தே சங்கத்தின் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்திய கராத்தே வீராங்கனைகள், காமன்வெல்த் கராத்தே போட்டி, ஆசிய கராத்தே போட்டி, தெற்கு ஆசிய கராத்தே போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்று, நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளனர். இதுமட்டுமல்லாமல் முதல் முறையாக கராத்தே வீராங்கனைகள் இந்திய-திபெத்திய எல்லை போலீஸ், அசாம் துப்பாக்கி படை போலீஸ் போன்ற துணை ராணுவ படைகளிலும், அரியானா, பஞ்சாப், தமிழ்நாடு போலீஸ் துறை மற்றும் வருமானவரித்துறையிலும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

உலக மற்றும் ஆசிய அளவில் தகுதி வாய்ந்த நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த சோனிகா விக்ரமன், தேசிய தெற்கு ஆசிய காமன்வெல்த் கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுப்ரியா ஜாதவ், இதே போட்டிகளில் தங்க பதக்கங்கள் பெற்ற தமிழகத்தை சேர்ந்த என்.ஹர்ஷா, ஒடிசாவை சேர்ந்த வேலனா வேலன்டினா, டெல்லியை சேர்ந்த அம்ரித் பால் கவுர், மும்பையை சேர்ந்த சந்தியா ஷெட்டி, மாநில மற்றும் தேசிய சாம்பியன்களான தமிழகத்தை சேர்ந்த பிரியங்கா, குந்தவி, ராஜேஷ்வரி, தேசிய மற்றும் அமெரிக்க ஓபன் சாம்பியன் யாமினி, மாநில போட்டிகளில் பதக்கம் பெற்ற ஹரிபிரியா, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றிபெற்ற தெலுங்கானாவை சேர்ந்த சைத்யா பாலக் ஆகியோர் ரஜினிகாந்தால் பாராட்டப்பட்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கராத்தே வீராங்கனைகள் ரஜினிகாந்த் முன்பு சில கராத்தே பயிற்சிகளை செய்து காண்பித்தனர். அவர்களை ரஜினிகாந்த் பாராட்டியதுடன், விருதுகள் வழங்கியும் கவுரவித்தார்.

இந்திய கராத்தே சங்கம் சார்பில் ரஜினிகாந்துக்கு கராத்தே தியாகராஜன் ஜப்பான் நாட்டுக்குரிய சாமுராய் போர்வாளை பரிசாக அளித்தார். இதுகுறித்து கராத்தே தியாகராஜன் கூறுகையில், “உலக மகளிர் தினத்தன்று மாநில-தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்று, இந்த நாட்டுக்கு பெருமை சேர்ந்த கராத்தே வீராங்கனைகளை ரஜினிகாந்த் சந்தித்து பெருமைப்படுத்தி இருக்கிறார். கராத்தே வீராங்கனைகளுக்கு அவர் அளித்த அந்த பெருமையே மகளிர் தின பரிசு” என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை