மாநில செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெண்களே இயக்கிய 3 விமானங்கள் + "||" + 3 flights operated by women in Chennai

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெண்களே இயக்கிய 3 விமானங்கள்

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெண்களே இயக்கிய 3 விமானங்கள்
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து 3 விமானங்களை பெண் விமானிகளே இயக்கினார்கள். அவர் களுக்கு பயணிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆலந்தூர், 

மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து 3 விமானங்களை பெண் விமானிகளே இயக்கினார்கள். அவர் களுக்கு பயணிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 விமானங்களை பெண் விமானிகளே இயக்க ஏர்-இந்தியா விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று அதிகாலை 5.05 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்ற விமானத்தை பெண் விமானிகள் தீபா, ஸ்த்யா மற்றும் பெண் பணியாளர்கள் மட்டுமே இயக்கினார்கள். அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 93 பயணிகள் அந்தமானுக்கு பயணம் செய்தனர்.

முன்னதாக பெண் விமானிகள் தலைமையிலான குழுவினருக்கு பயணிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அந்த குழுவினர், அந்தமானில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 111 பேருடன் மீண்டும் சென்னைக்கு திரும்பிவந்தனர்.

அதேபோல அதிகாலை 5.55 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்புக்கு சென்ற விமானத்தை விமானிகள் ரூபா, நிமிஷா கொண்ட குழுவினர் இயக்கினார்கள். இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 88 பேர் பயணம் செய்தனர். பின்னர் அந்த விமானம் கொழும்பில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்டது.

பகல் 1.15 மணிக்கு கோவைக்கு சென்ற விமானத்தை விமானிகள் ரம்யா ரங்கராஜ், விருந்தா நாயர் தலைமையிலான குழுவினர் இயக்கினர். அந்த விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 131 பயணிகள் சென்றனர். பின்னர் அந்த குழுவினர் கோவையில் இருந்து 5 குழந்தைகள் உள்பட 164 பேருடன் மீண்டும் சென்னைக்கு திரும்பிவந்தனர்.

முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு விமானத்தில் ஏறவந்த குழந்தைகள், பெண்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல் சென்னை விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் பெண்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் விமான நிலைய ஆணையகம், மத்திய தொழில் பாதுகாப்புபடை போலீசார், விமான நிறுவனங்களின் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவை சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தொடங்கி வைத்தார்.