மாநில செய்திகள்

பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளை அகற்ற சொல்கிறாரா? கமல்ஹாசன் மீது வைகோ பாய்ச்சல் + "||" + Vaiko Flow on Kamal Haasan

பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளை அகற்ற சொல்கிறாரா? கமல்ஹாசன் மீது வைகோ பாய்ச்சல்

பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளை அகற்ற சொல்கிறாரா? கமல்ஹாசன் மீது வைகோ பாய்ச்சல்
அரசியலுக்கு வந்து 5, 6 நாட்களே ஆகும் கமல்ஹாசன் எங்களுக்கு அறிவு போதனைகளை போதிக்கவேண்டாம் என்றும் வைகோ கூறினார். #KamalHaasan #Vaiko
சென்னை

பெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளை கமல்ஹாசன் அகற்ற சொல்கிறாரா? என்றும், அரசியலுக்கு வந்து 5, 6 நாட்களே ஆகும் கமல்ஹாசன் எங்களுக்கு அறிவு போதனைகளை போதிக்கவேண்டாம் என்றும் வைகோ கூறினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது. விழாவுக்கு, அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் மல்லிகா தயாளன், ராணி செல்வி, சந்திரா ஜெகநாதன், நீலாம்பிகை சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சமூகத்தில் பெண்களின் பங்களிப்பையும், சிறப்புகளையும் விளக்கி பேசினார். மேலும் மகளிரணி நிர்வாகிகளுக்கு பூங்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். விழாவின் முடிவில் லட்சுமி ஜீவா நன்றியுரை நிகழ்த்தினார்.

முன்னதாக வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் குறித்து தெரிவித்த சர்ச்சை அடங்குவதற்குள், தமிழை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் திராவிடம் என்றும், தமிழ் சனியன் ஒழியட்டும் என்றும் பெரியார் கூறியதாக திமிராகவும், தைரியமாகவும் மீண்டும் பேசியுள்ளார். இதுபோன்று எச்.ராஜா பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் பின்புலமாக இருந்து கொடுக்கும் ஆதரவும் தான் காரணம்.

தமிழ் உணர்ச்சியை தமிழகத்தில் இருந்து அழிக்கவேண்டும் என்பதற்கான வேலையை டெல்லியில் இருந்து மோடியும், அமித் ஷாவும் செய்கிறார்கள். நாங்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம். ஆனால் தமிழன், திராவிட இயக்கத்தின் தன்மானம் மற்றும் சுயமரியாதைக்கு சவால் விடும் வகையில் யாரும் ஊளையிடுவதை சகிக்கமுடியாது.

வெட்டிப்பேச்சு பேசவேண்டாம் என்றும், எல்லா சிலைகளையும் அகற்றினால், பெரியார் சிலையை அகற்றலாம் என்றும் டுவிட்டரில் கமல்ஹாசன் ஒரு பதிவு போட்டார். தமிழகம் முழுவதும் நெருப்பு பிடித்துவிட்டது என்று தெரிந்ததும், தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அண்ணா சிலை, பெரியார் சிலை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட எல்லா சிலைகளையும் கமல்ஹாசன் அகற்ற சொல்கிறாரா?

என்னவிதமான பெரிய அறிவு போதனைகளை எங்களுக்கு அவர் போதிக்கிறார்? வைகோ போன்றவர்கள் வெட்டிப்பேச்சு பேசவேண்டாம் என்று சொல்கிறார். நான் 54 வருடங்களாக பொது வாழ்வில் இருக்கிறேன். அவர் அரசியலுக்கு வந்து 5, 6 நாட்கள் ஆகிறது. அவர் கொஞ்சம் அடக்கிவாசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.