உலக செய்திகள்

மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரி புகார் + "||" + India highlights human rights violations by Pak at UN

மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரி புகார்

மனித உரிமை  கவுன்சிலில் பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரி புகார்
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரி புகார் அளித்துள்ளது. #UN #humanrights
ஜெனீவா,

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 37-வது கூட்டம் சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா உறுப்பினர்கள் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதிநிதி கூறுகையில்,

காஷ்மீரில் பெருமளவு மனித உரிமைகள் மீறல் உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி இந்தியா மீது சரமாரி புகார் அளித்தார். அதற்கு இந்திய தரப்பில் கலந்து கொண்ட பிரதிநிதி தேவி கும்மம் பேசுகையில், 

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கூறுவது  உண்மை கிடையாது. அது எங்கள் உள்நாட்டு விவகாரம். ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான், சிந்து ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் நடவடிக்கைகள் குறித்து மனித உரிமைகள் மீறல்கள் இந்த உலகம் அறியும். மேலும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படையினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், பயங்கரவாதிகளின் ஊடுருவலும் இந்தியாவிற்கு பெரும் இடையூறாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.