தேசிய செய்திகள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் 4 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் + "||" + Why French President Emmanuel Macron’s visit to India is important

பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் 4 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் 4  நாள் அரசு முறை பயணமாக இன்று  இந்தியா வருகிறார்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் 4 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். #EmmanuelMacron
புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் 4 நாள் அரசு முறை பயனமாக இன்று இந்தியாவிற்கு வருகிறார்.  மனைவி மேரி கிளாட் மெக்ரானுடன் டெல்லி வரும் அவர், திங்கள் கிழமை வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர் 12-ம் தேதி உத்தர பிரதேசம் வாரணாசியில் மிர்சாபூரில் உள்ள 75 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி உற்பத்தி உலையை தொடங்கி வைக்கிறார். 

மெக்ரானின் வருகையின் போது அணு சக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு, விண்வெளி, ஆற்றல் சார் துறைகள், தீவிரவாதம், பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் அதிபராக பதவியேற்ற பின் இம்மானுவேல் மெக்ரான் முதன் முறையாக இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.