தேசிய செய்திகள்

திரிபுரா மாநில முதல் மந்திரியாக பிப்லாப் தேப் இன்று பதவி ஏற்பு + "||" + Biplab Deb to be sworn in as Tripura CM today

திரிபுரா மாநில முதல் மந்திரியாக பிப்லாப் தேப் இன்று பதவி ஏற்பு

திரிபுரா மாநில முதல் மந்திரியாக பிப்லாப் தேப் இன்று பதவி ஏற்பு
திரிபுரா மாநில முதல் மந்திரியாக பிப்லாப் தேப் இன்று பதவி ஏற்கிறார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். #PMmodi #BiplabDeb
அகர்தலா,

திரிபுரா சட்டப் பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி ஆகியவை 43 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகளில் மட்டும் வென்றது இதையடுத்து திரிபுராவில் புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெற்றது. அதில் திரிபுரா முதல்வராக பிப்லாப் குமார் தேபும், துணை முதல்வராக ஜிஷ்ணு தேபர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு விப்லப் தேப் ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, விப்லப் தேப்  முதல் மந்திரியாக இன்று பதவியேற்க உள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, வடகிழக்கு பிராந்தியங்களில் பாஜக ஆளும் மூன்று மாநில முதல் மந்திரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.