தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 3 பேர் பலி, பலர் காயம் + "||" + 13 Injured In Fire At Chemical Factory In Maharashtra's Palghar, Blast Heard 10 Km Away

மராட்டியத்தில் இரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 3 பேர் பலி, பலர் காயம்

மராட்டியத்தில் இரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 3 பேர் பலி, பலர் காயம்
மராட்டிய மாநிலத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். #FireAccident
மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பால்கர் மாவட்டம்.  இங்கு  தாராப்பூர் அணுசக்தி மையம்  உள்ளிட்டவை இயங்கி வருகிறது. இதன் அருகில் பொய்சர் - தாராப்பூர் தொழிற்பேட்டையும் இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அங்குள்ள தனியார்  இரசாயன  கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. கம்பெனியில் பரவிய தீ அருகிலுள்ள மற்ற கம்பெனிகளுக்கும் பரவியது. இரவு 11.15 மணியளவில் திடீரென பயங்கர வெடிச்சத்தமும் கேட்டது. சுமார் 10 கி.மீட்டர் தொலைவுக்கு இந்த சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த அசாதாரண சத்தத்துடன் வீடுகளும் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.  நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதி, நள்ளிரவு வேளையில் சில இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த தீ விபத்து குறித்து தகவல் வந்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 13 பேர்  அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இரசாயன ஆலையின் பாய்லர் பிரிவில் தீ முதலில் பற்றியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.