உலக செய்திகள்

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை + "||" + Turkey: 25 journalists get seven years in prison for links to group that failed coup in 2016

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நீதிமன்றம் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.
இஸ்தான்புல்

 துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக  குற்றம் சுமத்தப்பட்டது. 
இந்த வழக்கில் இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. 

பத்திரிகையாளர்கள் 23 பேர் ஆயுதமேந்திய பயங்கரவாதக் குழு உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். மேலும் இரண்டு பேர் சில குற்றச்சாட்டுக்களில் தொடர்பு இருப்பதாக டோக்கன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அனைத்து பத்திரிகையாளர்களும் அமெரிக்காவைச் சார்ந்த போதகர் பெத்தூலா குலென், குழுவுக்கு  நெருக்கமான ஊடகங்களுக்கு வேலை செய்பவர்கள் ஆவார்கள்.