தேசிய செய்திகள்

தீராத நோயுடையவர்கள் சில விதிகளுக்குட்பட்டு கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம் -சுப்ரீம் கோர்ட் + "||" + Living Will Allowed With Strict Guidelines, Says Supreme Court

தீராத நோயுடையவர்கள் சில விதிகளுக்குட்பட்டு கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம் -சுப்ரீம் கோர்ட்

தீராத நோயுடையவர்கள் சில விதிகளுக்குட்பட்டு கருணைக்கொலை  செய்ய அனுமதிக்கலாம் -சுப்ரீம் கோர்ட்
கருணைக் கொலை மற்றும் வாழும்போதே தன் உயிர் தொடர்பான உயில் எழுதி வைக்கும் நடைமுறை சட்டப்படி செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. #PassiveEuthanasia #SupremeCourt
புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான  5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம். மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு.  நோயாளியின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிர் பிரிய அனுமதிக்கலாம் மேலும் கருணை கொலை செய்வதற்கான சில நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது.

நீதிபதிகளான ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஐ. சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோரை உள்ளடக்கிய பெஞ்ச், அமைதியான முறையில் இறப்பதற்கு உரிமை கூறுவது அரசியலமைப்பின் 21 ஆம் பிரிவின் கீழ் வாழ்வதற்கான அடிப்படை உரிமையாகும்.

21வது பிரிவு "சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட அடிப்படையின்  படி தவிர எந்த நபரும் அவரது வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்க மாட்டார்கள்." என கூறுகிறது.