தேசிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் டெல்லியில் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது + "||" + Central government's consultative meeting began in Delhi on the Cauvery issue

காவிரி விவகாரத்தில் டெல்லியில் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது

காவிரி விவகாரத்தில் டெல்லியில் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. #CauveryManagementBoard
புதுடெல்லி,

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விவாதிக்க 4 மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்பட அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் இன்று துவங்கியது. 

இந்த கூட்டத்தில்  தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில  தலைமைச்செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.  மத்திய நீர் வளத்துறை செயலாளர் உபேந்திர  பிரசாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.