தேசிய செய்திகள்

திரிபுரா மாநில முதல் மந்திரியாக பிப்லாப் தேப் பதவி ஏற்றுக்கொண்டார் + "||" + Biplab Deb Takes Oath As Tripura Chief Minister, PM Modi In Attendance

திரிபுரா மாநில முதல் மந்திரியாக பிப்லாப் தேப் பதவி ஏற்றுக்கொண்டார்

திரிபுரா மாநில முதல் மந்திரியாக பிப்லாப் தேப் பதவி ஏற்றுக்கொண்டார்
திரிபுரா மாநிலத்தின் முதல் மந்திரியாக பிப்லாப் தேப் பதவி ஏற்றுக்கொண்டார். திரிபுராவில் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். #BiplabDeb
அகர்தலா,

திரிபுரா சட்டப் பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டி ஆகியவை 43 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகளில் மட்டும் வென்றது. இதையடுத்து திரிபுராவில் புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெற்றது. அதில் திரிபுரா முதல்வராக பிப்லாப் குமார் தேபும், துணை முதல்வராக ஜிஷ்ணு தேபர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு பிப்லப் தேப் ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, இன்று காலை பிப்லப் தேப்  முதல் மந்திரியாக இன்று பதவியேற்றுக்கொண்டார். பிப்லப் தேவிற்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, வடகிழக்கு பிராந்தியங்களில் பாஜக ஆளும் மூன்று மாநில முதல் மந்திரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.