தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அமளியால் 5-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு + "||" + Parliament Both Houses Impact Activities

எதிர்க்கட்சிகளின் அமளியால் 5-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் 5-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால் 5-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. #Parliament
புதுடெல்லி,

பல்வேறு கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் கடந்த 4 நாட்களாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 5-வது நாளாக இன்று மக்களவை கூடியது.  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் வங்கி மோசடி தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்கு தேசமும், இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதியினரும் வலியுறுத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோ‌ஷமிட்டனர். தொடர்ந்து அமளி நீடித்தது. மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதே பிரச்சினை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. காவிரி பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க.–தி.மு.க. எம்.பி.க்கள் கோ‌ஷமிட்டனர். மற்ற கட்சிகள் வழக்கம்போல தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர் இதனால் மாநிலங்களவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்  அதிமுக எம்.பி.க்கள் 5-வது நாளாக இன்று  போராட்டம்  நடத்தினர்.