தேசிய செய்திகள்

நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மும்பையில் பேச்சு + "||" + It is a life that I have been neglecting for too long: kamalhaasan on his political plunge

நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மும்பையில் பேச்சு

நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மும்பையில் பேச்சு
நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். #KamalHasan
மும்பை,

மும்பையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பேசியதாவது:- நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன். நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன். என் சினிமா வாழ்க்கை நிறைவு பெற்றது, இனி சாகும்வரை மக்கள் பணியாற்றவே விருப்பம். 

தமிழகத்தில் குப்பை அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மாற்றத்துக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்த அரசை நாங்கள் அமைக்க முயற்சிசெய்வோம். தேர்தலில் வெற்றி பெறுவதை விட சித்தாந்தமே முக்கியமானது. பணம் சம்பாதிக்க அரசியலில் இணையவில்லை. ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி எந்த இடமும் இல்லை. காந்தி, பெரியார், அம்பேத்கார் ஆகிய தலைவர்கள்தான் எனது ஹீரோக்கள்” இவ்வாறு அவர் பேசினார்.