தேசிய செய்திகள்

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்- நீர் வளத்துறை செயலாளர் + "||" + According to the Supreme Court verdict in Cauvery case We have started all activities Water Resources Secretary

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்- நீர் வளத்துறை செயலாளர்

காவிரி வழக்கில்  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்- நீர் வளத்துறை செயலாளர்
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்- நீர் வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங் கூறினார். #CauveryManagementBoard
புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உத்தரவிட்டது.   உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழகம் உட்பட 4 மாநில அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். தமிழகம் சார்பில்  தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோா்  பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்தப்பட உள்ளது.  அது மட்டுமின்றி, தமிழகத்தின் கோடைக்கால தேவைக்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி 63 டி.எம்.சி., நீர் திறக்கவும் கோரிக்கை விடப்படவுள்ளது.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கலாம்என 4 மாநிலங்களிடமும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காவிரி தொடர்பான செயல் திட்டம் நான்கு மாநில அரசுகளும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. திங்கட்கிழமை தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பில் தெளிவுப்படுத்தவில்லை என  கூட்டத்துக்கு பின் கர்நாடக தலைமைச் செயலாளர் பேட்டி அளித்தார்.

காவிரி விவகாரத்தில் சுமுக தீர்வு காண திட்டம் வகுக்கப்படும். காவிரி வழக்கில்  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம். மேலாண்மை வாரியம் என்ற விஷயத்தை உச்சநீதிமன்றம் கூறவில்லை  திட்டம் என்று மட்டுமே கூறியுள்ளது. சுப்ரீம்கோர்ட்  பிறபித்த  உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். என நீர் வளத்துறை செயலாளர் உபேந்திரா பிரசாத் சிங் கூறினார்.