உலக செய்திகள்

மலாலாவை சுட்ட தலிபான் தீவிரவாதி உள்பட 3 பேர் தலைக்கு, அமெரிக்கா ரூ.70 கோடி பரிசு அறிவிப்பு + "||" + US offers USD 11 mn bounty on Malala shooter, 2 other Pak Taliban leaders

மலாலாவை சுட்ட தலிபான் தீவிரவாதி உள்பட 3 பேர் தலைக்கு, அமெரிக்கா ரூ.70 கோடி பரிசு அறிவிப்பு

மலாலாவை சுட்ட தலிபான் தீவிரவாதி உள்பட 3 பேர் தலைக்கு, அமெரிக்கா ரூ.70 கோடி பரிசு அறிவிப்பு
மலாலாவை சுட்ட பாகிஸ்தான் தலிபான் தலைவர் உள்பட 3 பேர் தலைக்கு அமெரிக்கா ரூ.70 கோடி பரிசு அறிவித்து உள்ளது. #MalalaYousafzai
வாஷிங்டன்

பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் அதனுடன் இணைந்த பிரிவுகளுடன் தொடர்புடைய மூன்று முக்கிய தலைவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் இடத்தை தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்  மவுலானா பஸ்லூலாவுக்கு அமெரிக்கா  5 மில்லியன் டாலர் (32 கோடி ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை  அறிவித்து உள்ளது. அது போல் அப்துல் வாலி மற்றும் மங்கல் பாக் ஆகியோருக்க்கு தலா 3 மில்லியன் டாலர் ( ரூ.19  கோடி) வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

மவுலான பஸ்லூலா பாகிஸ்தானிய ஆர்வலர் மலாலா யூசுப் மீது  2012 அக்டோபர் 9 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மேலும் பாகிஸ்தானிய மற்றும் அமெரிக்க நலன்களுக்கு எதிரான பல பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்புடையவர் ஆவார்.

இவரது தலைமையில் தான் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ஒரு பள்ளி மீது தாக்குதல் நடத்தி 132  மாணவர்கள் உள்பட  148 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் ஜூன் 2012-ல் 17 பாகிஸ்தானிய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.