மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும் -விவேக் ஜெயராமன் + "||" + Regarding Jayalalithaa's death At the end of the investigation The truth will come to know Vivek Jayaraman

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும் -விவேக் ஜெயராமன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும் -விவேக் ஜெயராமன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும் என 2-வது முறையாக ஆஜரான விவேக் ஜெயராமன் கூறினார். #JayalalithaaDeath #Vivek
சென்னை

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், செயலாளர் வெங்கடரமணன், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, அரசு டாக்டர் பாலாஜி, அப்பல்லோ டாக்டர்கள், ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இளவரசி மகனும் ஜெயா டி.வி.யின் செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஏற்கனவே கடந்த மாதம் 13-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பின்னர்  விவேக் இன்று ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று இன்று காலை 10.15 மணிக்கு விசாரணை ஆணையத்தில் விவேக் ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார்.  இதற்கு விவேக் விளக்கமாக பதில் அளித்தார். விசாரணை முடிந்ததும் விவேக் ஜெயராமன் நிருபர்களிடம் கூயதாவது:-

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும். விசாரணை ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும்  பதிலளித்தேன். விசாரணை நடைபெறுவதால் என்னுடைய விளக்கத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது  இவ்வாறு  அவர் கூறினார்.