மாநில செய்திகள்

சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை + "||" + Chennai KK nagar Student stabbed and killed

சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை

சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை
சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி வாசலில் நின்ற மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சென்னை

சென்னை கே.கே.நகரில்  உள்ள ஒரு தனியார் கல்லூரி வாசலில் அதே கல்லூரியில் பி.காம் படிக்கும் மாணவி அஸ்வினி நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த  வாலிபர் ஒருவர்  மாணவி அஸ்வினியை சரமாறியாக கத்தியால் குத்தினார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.   உடனடியாக அவரை அங்குள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  மாணவியை கத்தியால் குத்திய  வாலிபரை பொதுமக்கள்  பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மாணவியை கொன்ற வாலிபர் யார்? எதற்காக மாணவி அஸ்வினியை கொன்றார் என்ற விவரம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.