மாநில செய்திகள்

ஒருதலை காதலா? சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கொலை செய்யப்பட்டது ஏன்? + "||" + in Chennai In college entrance Knocking the student Why killing

ஒருதலை காதலா? சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கொலை செய்யப்பட்டது ஏன்?

ஒருதலை காதலா? சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கொலை செய்யப்பட்டது ஏன்?
சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை

சென்னை கே.கே.நகரில்  உள்ள் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்  முதல் ஆண்டு படித்து வந்தவர்  அஸ்வினி.  இன்று மாலை கல்லூரி முடிந்து  வீட்டிற்கு செல்வதற்காக  கல்லூரி வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த  வாலிபர் ஒருவர்  மாணவி அஸ்வினியை சரமாறியாக கத்தியால் குத்தினார். இதில் மாணவி  ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவரை அங்குள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  மாணவியை கத்தியால் குத்திய  வாலிபரை  பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில்  மாணவி  அஸ்வினியை கத்தியால் குத்திய வாலிபர் பெயர்  அழகேசன் என்றும் அவர் மதுரவாயலில் வசித்து வருகிறார்  என்றும்  தெரியவந்து உள்ளது. அழகேசன் சுகாதாரதுறையில் வேலை பார்த்து வருகிறார். காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அஸ்வினி அழகேசன் மீது  மதுரவாயல் போலீசில் புகார் ஒன்று அளித்து உள்ளார். இது தொடர்பாக அழகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். அஸ்வினி மதுரவாயல் ஆலபாக்கத்தை சேர்ந்தவர் ஆவார்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.