தேசிய செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் + "||" + INX Media Case: CBI gets custody of Karti Chidambaram till 12th March

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #KartiChidambaram #INXMediacase
புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் 2007-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி அந்நிய முதலீட்டை திரட்டியதாக புகார் கூறப்பட்டது. இதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த பீட்டர் முகர்ஜி-இந்திராணி முகர்ஜி தம்பதியர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தனர்.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, கடந்த மாதம் 28-ந் தேதி லண்டனில் இருந்து சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரம் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை டெல்லி அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 5 நாள் சி.பி.ஐ. காவல் முடிந்து, அவரை டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி சுனில் ராணா முன்னிலையில்  சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். கார்த்தி சிதமபரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை அவரை மேலும் 9 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். ஆனால் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் சி.பி.ஐ. காவலுக்கு நீதிபதி சுனில் ராணா உத்தரவிட்டார்.

 கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகிறார் என்பதே சிபிஐயின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. 

கார்த்தி சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில்  சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

 3 நாள் சி.பி.ஐ. காவல் முடிந்த நிலையில்  சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை டெல்லி பாட்டியாலா நிதி மன்றத்தில் இன்று  ஆஜர்படுத்தியது.  கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது