பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் வெள்ளி வென்றார் + "||" + Shooting World Cup: Anjum Moudgil wins silver in women’s Rifle 3 Positions

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் வெள்ளி வென்றார்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் வெள்ளி வென்றார்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் வெள்ளி பதக்கம் வென்றார். #ShootingWorldCup
புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று  நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் 454.2 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான சீனாவின் ருய்ஜியோ பெய் 455.4 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தையும், மற்றொரு சீன வீராங்கனை டிங் சுன் 442.2 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர். இந்த போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கம் வென்று முதலிடத்தில் நீடிக்கிறது.