தேசிய செய்திகள்

பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்பு + "||" + Prime Minister Narendra Modi received Emmanuel Macron

பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்பு

பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்பு
அரசு முறை பயணமாக டெல்லி வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். #NarendraModi #EmmanuelMacron
புதுடெல்லி,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் 4 நாள் அரசு முறை பயனமாக இன்று இந்தியா வந்தார் அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.  டெல்லி விமான நிலையத்தில் மெக்ரானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மனைவி மேரி கிளாட் மெக்ரானுடன் வந்த அவர், திங்கள் கிழமை வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.  நாளை பிரான்ஸ் அதிபரும் பிரதமர் மோடியும் நாளை (மார்ச் 10) பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் அணு சக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு, விண்வெளி, ஆற்றல் சார் துறைகள், தீவிரவாதம், பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனை தொடர்ந்து 12-ம் தேதி உத்தர பிரதேசம் வாரணாசியில் மிர்சாபூரில் உள்ள 75 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி உற்பத்தி உலையை தொடங்கி வைக்கிறார். 

பிரான்ஸ் அதிபராக பதவியேற்ற பின் இம்மானுவேல் மெக்ரான் முதன் முறையாக இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.