மாநில செய்திகள்

திருமணம் செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது கேரள இளம்பெண் ஹதியா பேட்டி + "||" + The Supreme Court Judge is pleased with the Kerala teenager Hadiya interview

திருமணம் செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது கேரள இளம்பெண் ஹதியா பேட்டி

திருமணம் செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது கேரள இளம்பெண் ஹதியா பேட்டி
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் அகிலா. சேலத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். #Hadiya #lovejihad
சேலம்

கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் அகிலா. சேலத்தில் உள்ள தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர், கேரளாவை சேர்ந்த ‌ஷபின்ஜகான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஹதியா என பெயர் மாற்றிக்கொண்டார். மதம் மாறி திருமணம் செய்து கொண்ட மகளின் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என அவரது தந்தை அசோகன், கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, ஹதியாவின் திருமணம் செல்லாது என உத்தரவிட்டது. இதையடுத்து ‌ஷபின்ஜகான் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில், கேரள மாணவி ஹதியா–‌ஷபின்ஜகான் திருமணம் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்த தகவல் அறிந்தவுடன் சேலம் தனியார் சித்த மருத்துவக்கல்லூரியில் தங்கி படித்து வரும் ஹதியா மகிழ்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக மாணவி ஹதியா கூறுகையில், எனது எண்ணங்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தேன். தற்போது கிடைத்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மகளிர் தினத்தில் எனக்கு கிடைத்த பெறும் வெற்றியாக இதை கருதுகிறேன், என்றார். இதனிடையே மாணவி ஹதியாவை அவரது கணவர் ‌ஷபின்ஜகான் கல்லூரியில் இருந்து கேரளாவிற்கு அழைத்து சென்று விட்டார்.