தேசிய செய்திகள்

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு + "||" + High Court asks CBI to file status report and reply on the bail plea of KartiChidambram by March 16

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #KartiChidambram #INXMediaCase

புதுடெல்லி,


ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, அவரை வருகிற 24–ந்தேதி வரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் தயான் கிருஷ்ணன் நீதிபதியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு வருகிற 15–ந்தேதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அந்த மனு மீது இன்றே (அதாவது நேற்று) விசாரணை நடத்த வேண்டும் என்று வக்கீல் தயான் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி, ஜாமீன் மனு மீது 15–ந்தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி கூறினார்.

இதற்கிடையே, ஜாமீன் மனு தனிக்கோர்ட்டு விசாரிக்க மறுத்ததை தொடர்ந்து, டெல்லி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது வக்கீல் தயான் கிருஷ்ணன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோரை கொண்ட அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, தகுந்த அமர்வு முன் நாளை (இன்று) விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜாமீன் மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, இதுதொடர்பாக மார்ச் 16-க்குள் வழக்கு நிலை அறிக்கை மற்றும் பதிலை தெரிவிக்குமாறு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.தொடர்புடைய செய்திகள்

1. ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2. கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் ரத்து
கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உள்ளது. #KarthiChidambaram
3. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் மனு
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக சிபிஐ சுப்ரீம் கோர்ட்டு சென்றுள்ளது. #KartiChidambaram #INXmediacase
4. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. #KartiChidambaram
5. ஏர்செல்–மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு
ஏர்செல்–மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முறையே 2011 மற்றும் 2012–ம் ஆண்டுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.