தேசிய செய்திகள்

ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு + "||" + Aadhaar Not Mandatory For Banking, Phones Until Court Decides On Validity

ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. #SupremeCourt #Aadhaar
புதுடெல்லி,

 அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப்பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் எண்கள்,வங்கி கணக்குகள் போன்றவற்றில் பயனாளர்கள் ஆதார் எண்ணை  வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம்  இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.

 இந்த வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதாவது, வங்கி கணக்கு, செல்போன் எண்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, ஆதார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீட்டிக்கப்படுவதாக அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது வரும் திங்கள் கிழமை விசாரணை
ஸ்டெர்லைட் விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
2. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உத்தரவை அவசரமாக மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
3. நீதிபதி கே.எம் ஜோசப் விவகாரம்: கொலிஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
நீதிபதி கே.எம் ஜோசப் பதவி உயர்வுக்கு கொலிஜியம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
4. கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு: 20 ஆம் தேதி விசாரணை
கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமையன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. #SupremeCourt
5. ஓரினச்சேர்க்கை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்-மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி கோரிய மனு மீது தீர்மானிக்கும் முடிவை உச்ச நீதிமன்றத்திடமே விட்டுவிடுகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது. #SupremeCourt