மாநில செய்திகள்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா 23-ந் தேதி நடத்தப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல் + "||" + One Year Achievement of the Government of Tamil Nadu

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா 23-ந் தேதி நடத்தப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா 23-ந் தேதி நடத்தப்படும்
அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா வருகிற 23-ந் தேதி நடத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
சென்னை,

தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பு சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

மாவட்டத்தில் எத்தனை துறைகள் இருந்தாலும், அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தக்கூடிய ஒரே துறை செய்தி மக்கள் தொடர்பு துறை தான். ஒரு துறையின் இயக்கம் சரியாக இருந்தால்தான், அந்த துறையின் செயல்பாடு நன்றாக இருக்கும். நமது துறை சரியான பாதையில் செல்கிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்றதோடு, மக்கள் அதன்மூலம் பயன்பெற்றதில் பெரும்பங்கை செய்தித்துறை வகித்தது. இது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 30 மாவட்டங்களில் நமது துறையின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகிற 23-ந் தேதி அவருடைய தலைமையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா நடத்துவது குறித்து கலந்து ஆலோசித்து வந்தேன்.

அப்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியதுபோல, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்தார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் ரா.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் பொ.சங்கர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் இயக்குநர் (செய்தி) எஸ்.பி.எழிலழகன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.ரவீந்திரன், இணை இயக்குநர்கள் பி.சாந்தி, க.சண்முகசுந்தரம், மு.பா.அன்புச்சோழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.