தேசிய செய்திகள்

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு தலைவர்கள் இரங்கல் + "||" + Scientist Stephen Hawking is dead The leaders mourn

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு தலைவர்கள் இரங்கல்

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு தலைவர்கள் இரங்கல்
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #RIP #StephenHawking #PresidentKovind #NarendraModi #SundarPichai

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணசெய்தி வருத்தமாக உள்ளது. நமது உலகம் மற்றும் நமது பிரபஞ்சம் ஒரு மர்மமான இடம் அவரது புத்திசாலித்தனத்தால் அறிந்து கொண்டோம். அவரது தைரியம் மற்றும் அவரது திறமை இனி வரும் தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் . பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளதாவது:-

பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் ஆவார். உலகெங்கிலும் உள்ள அவரது புத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சியால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். அவரது இறப்பு வேதனையாக உள்ளது. பேராசிரியர் ஹாக்கிங்கின் கண்டுபிடிப்புகள் நம் உலகத்தை ஒரு சிறந்ததாக மாற்றியது. அவருடைய ஆத்துமா சாந்தியடையட்டும். கூகுளின் தலைமைச்செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்து உள்ளார். நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற புகழ்பெற்ற இயற்பியலாளரும், அறிவியலின் தூதராகவும் இருந்தார். அவருடைய கோட்பாடுகள் உலகெங்கும் நாம் ஆராயும் சாத்தியக்கூறுகளின் ஒரு பிரபஞ்சத்தை திறக்கின்றன. என கூறி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

திரு.ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம் . அவர் புகழ் வாழும். பாரதீய ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது;-


தொடர்புடைய செய்திகள்

1. கஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு தென்னை விஞ்ஞானி விளக்கம்
கஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களுக்கு புத்துயிர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று திருவையாறு தென்னை விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
2. கருந்துளை மற்றும் மென்மையான முடி: ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சி கட்டுரை
கருந்துளை மற்றும் மென்மையான முடி என்ற தலைப்பில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சி கட்டுரை ஆன்லைனில் வெளியிடப்பட்டு உள்ளது.