தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் மீண்டும் நக்சலைட்டுகள் தாக்குதல்: அரசு வாகனங்கள் தீ வைத்து எரிப்பு + "||" + Chhattisgarh Visuals of government vehicles which were torched by the Naxals in Bijapur

சத்தீஷ்காரில் மீண்டும் நக்சலைட்டுகள் தாக்குதல்: அரசு வாகனங்கள் தீ வைத்து எரிப்பு

சத்தீஷ்காரில் மீண்டும் நக்சலைட்டுகள் தாக்குதல்: அரசு வாகனங்கள் தீ வைத்து எரிப்பு
சத்தீஷ்கார் பீஜப்பூரில் நக்சலைட்டுகள் அரசு வாகனங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Naxals
பிஜப்பூர்,

நமது நாட்டில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்று, சத்தீஷ்கார். இங்கு அடர்ந்த காடுகளில் பதுங்கி இருந்து கொண்டு, அவ்வப்போது வெளியே வந்து நாச வேலைகளில் ஈடுபட்டு, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்துவது நக்சலைட்டுகளின் வாடிக்கையாக அமைந்து உள்ளது.

நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கூட்டு நடவடிக்கைகள் போதுமான வெற்றி தரவில்லை. இதனால் நக்சலைட்டுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநிலம் பீஜப்பூரில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அரசு வாகனங்களை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். தொழிலாளர்கள் மீதும் நக்சலைட்டுகள் இந்த தாக்குதல் நடத்தி உள்ளனர். நக்சலைட்டுகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.