தேசிய செய்திகள்

இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் + "||" + hock For BJP As Samajwadi Party Wins Phulpur, Leads In Gorakhpur

இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #UPByPolls #YogiAdityanath
லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கோரக்பூர் தொகுதி மற்றும் புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி  அமோக வெற்றி பெற்றது. 

உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு, இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வி பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

“ புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.   இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும். சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ்வாதி கூட்டணியை குறைத்து மதிப்பிட்டதும் தோல்விக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி நேற்று வழிபாடு நடத்தினார்.
2. கரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம், வேறு பயிர்களை பயிரிடுங்கள் விவசாயிகளுக்கு யோகி அட்வைஸ்!
கருப்புதான் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது எனவே வேறு பயிர்களை பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு யோகி ஆதித்யநாத் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
3. குரு பூர்ணிமாவை முன்னிட்டு யோகி ஆதித்யநாத்திடம் ஆசீர்வாதம் வாங்கிய போலீஸ் அதிகாரி
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் போலீஸ் அதிகாரி ஒருவர் ஆசீர்வாதம் வாங்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. ராகுல்காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர் - யோகி ஆதித்யநாத்
ராகுல்காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #RahulGandhi #YogiAdityanath
5. 2 நாள் சுற்றுப்பயணம்: ராகுல் காந்தி 4-ந் தேதி அமேதி செல்கிறார்
2 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4-ந் தேதி அமேதி செல்கிறார். #RahulGandhi