கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீச முடிவு + "||" + High on confidence B'desh opt to bowl

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீச முடிவு

20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீச முடிவு
20- ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. #IndvBan
கொழும்பு,

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை 139 ரன்னுக்குள் சுருட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் பதம் பார்த்த இந்திய அணி, மறுபடியும் இலங்கையுடன் மோதிய போது அதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்திய அணி இன்று தனது கடைசி லீக்கில் வங்காளதேசத்துடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் இந்தியா சிக்கலின்றி இறுதிப்போட்டியை எட்டிவிடலாம். 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி இந்திய அணியை முதலில்  பேட் செய்யுமாறு பணித்தது. இதன்படி இந்திய அனி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா:- ரோகித் ஷர்மா (கேப்டன்),  ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), விஜய்சங்கர், வாஷிங்டன் சுந்தர், தாகூர், முகம்மது சிராஜ், யுஸ்வேந்தர சகால்,

வங்காளதேசம்:- தமிம் இக்பால், சவுமியா சர்கார், லிடன் தாஸ், முஸ்புகிர் ரகிம் (விக்கெட் கீப்பர்), ஷபிர் ரகுமான், மெஹிடி ஹாசன், ருபேல் ஹூசைன், அபு ஹைடர் ரோனி, முஷ்தாபிஸூர் ரகுமான், நஸ்முல் இஸ்லாம்,தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை ஊதித்தள்ளியது இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை ஊதித்தள்ளியது. பந்து வீச்சில் ஜடேஜாவும், பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மாவும் அசத்தினர்.
2. இந்தியா- பாக். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேச இருப்பது சிறப்பான செய்தி: அமெரிக்கா
நியூயார்க்கில் இந்தியா- பாக். வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்தித்து பேச இருப்பது சிறப்பான செய்தி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3. ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #BANvsAFG #AsiaCup2018
4. மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்
பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் நியூயார்க்கில் சந்திக்கவுள்ளனர்.
5. எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
சர்வதேச எல்லையில் இந்திய ராணுவ வீரரை கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.