தேசிய செய்திகள்

கோரக்பூர், பூல்பூர் இடைத்தேர்தல் வெற்றிக்கு மாயாவதிக்கு நன்றி கூறிய அகிலேஷ் யாதவ் + "||" + Akhilesh Yadav Thanks Mayawati for Gorakhpur, Phulpur Wins

கோரக்பூர், பூல்பூர் இடைத்தேர்தல் வெற்றிக்கு மாயாவதிக்கு நன்றி கூறிய அகிலேஷ் யாதவ்

கோரக்பூர், பூல்பூர் இடைத்தேர்தல் வெற்றிக்கு மாயாவதிக்கு நன்றி கூறிய அகிலேஷ் யாதவ்
கோரக்பூர், பூல்பூர் இடைத்தேர்தல் வெற்றிக்கு மாயாவதிக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நன்றி கூறிஉள்ளார். #UPByPoll #Gorakhpur

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் பூல்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றியை தனதாக்கியது. ஆளும் கட்சியான பாரதீய ஜனதா தோல்வியை தழுவியது. வெற்றியை அடுத்து சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெற்றிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு நன்றியை தெரிவித்தார். இரு தொகுதிகளும் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரியுடையது. இரு தொகுதியில் மட்டுமே மக்கள் கோபம் இவ்வளவு இருக்கும் நிலையில் பிற பகுதியில் எப்படி இருக்கும் என பார்த்துக்கொள்ளுங்கள். பாரதீய ஜனதாவிற்கு பொதுமக்கள் சரியான பதிலடியை கொடுத்து உள்ளார். 

உத்தரபிரதேச மாநில இடைத்தேர்தல் முடிவானது லட்சக்கணக்கான மக்களின் அரசியல் செய்தியை அனுப்பி உள்ளது. அரசு மீது மக்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கை உள்ளது, இந்த முடிவே அதற்கு அடையாளமாகும். மோடி அரசின் மீது மக்கள் மகிழ்ச்சியற்று உள்ளனர். ஜிஎஸ்டி அதிகமான மக்களின் வேலைவாய்ப்பை பறித்துவிட்டது, தொழிலையும் பாதித்துவிட்டது. சமூக நீதிக்கான வெற்றியாகும். பாரதீய ஜனதா ஒருபோதும் அதனுடைய வாக்குறுதியை நிறைவேற்றியது கிடையாது என்றார்.